பொதுத்தமிழ் வினா விடை சமச்சீர் பாடத்திட்டம்

1. பனைமரத்தில் இருந்து பிழைத்தவனும் வயல் வரப்பில் விழுந்து
இறந்தவனும் உண்டு என்றவர்
2. தமிழ் பாடும் சித்தர்
3. உ.வே.சா அவர்கள் புறநானூறு பதிப்பித்த ஆண்டு
4. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட
ஆண்டு
5. நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவியர்கள் யாவர்
6. அம்பேத்கர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் எந்த ஆண்டு,
எங்கு பெற்றார்?
7. காத்தவராயன் என்னும் இயற்பெயர் கொண்டவர்
8. நதிவரும் முன் மணல்வருமுன் நலம் வளர்த்த தமிழணங்கே
எனப் பாடியவர்
9. கெலன் கெல்லர் தொடக்கக் கல்வி பயின்ற பள்ளி எது
10. சிரம் துளக்கி என்பதன் பொருள்
விடை
1. முத்துராமலிங்கர்
2. முத்துராமலிங்கர்
3. 1894
4. 1988
5. பாசுகர சேதுபதி தலைமை, பாண்டித்துரை மேற்பார்வையில்,
இராகவனார், உ.வேசா மற்றும் பரிதிமாற்கலைஞர்
6. 1916, இலண்டனில்
7. அயோத்திதாசப் பண்டிதர்
8. கண்ணதாசன்
9. பெர்கின்ஸ்பள்ளி
10. தலையசைத்து
இடம் பெற்ற நூல்
1.கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் எண்ணில் கலந்தே
இருக்கின்றான்
2. வன்பாற்கன் வற்றல் மரம் தளித்தற்று
3. வாய்க்கால் அனையார் தொடர்பு
4. சாதி இரண்டொழிய வேறில்லை என தமிழ் மகள் சொன்ன
சொல் அமிழ்தம் என்பொம்
5. மனைக்கு விளக்கு மடவார்
6. ஏரிகுளங்கள் நிரம்பும் படி எங்கும் இன்பம் பெருகும் படி
7. ஆற்றுணா வேண்டுவது இல்
8. வைதாரைக்கூட வையாதே
9. பூமிப்பந்து என்ன விலை உன் புகழைத்தந்து வாங்கும் விலை
10. கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான்
விடை
1. திருவருட்பா
2. திருக்குறள்
3. நாலடியார்
4. பாரத தேசம்
5. நான்மணிக்கடிகை
6. இசையமுது
7. பழமொழி நானூறு (கல்வியின் சிறப்பு)
8. சித்தர் பாடல்
9. திண்ணையை இடித்துத் தெருவாக்கு
10. தனிப்பாடல்
வினாவிடை 10
1. பாமர மக்களிடையே சமுதாயப் பாடல்கள் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப்
பரப்பியவர்
2. தாராபாரதி எழுதிய நூல்கள் யாவை
3. மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை
எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பியமைத்தவர்
4. புரட்சித்துறவி, புதுநெறிகண்ட புலவர் என அழைக்கப்படுபவர்
5. பரஞ்சோதி முனிவரின் மொழிப்புலமை
6. பெருஞ்சித்ரனாரின் இயற்பெயர்
7. பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரத்தை 'நீ மீண்டும் தோன்றிய பாரதியடா' எனப்
புகழ்ந்தவர்
8. வாயசம் என்பதன் பொருள்
9. புதுக்கவிதை வளர்ச்சியில் இவருடைய பங்கு போற்றத்தக்கது
10. இவ்விரு கவிஞர்களும் யாப்பு நெறியை மீறியதில்லை, யாப்பினை ஒரு
தடையாகவும் எண்ணியதில்லை
விடை 10
1. உடுமலை நாராயணகவி
2. புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள்
(திண்ணையை இடித்துத் தெருவாக்கு)
3. பாரதியார்
4. வள்ளலார்
5. தமிழ், வடமொழி
6. துரை.மாணிக்கம்
7. தோழர் ஜீவானந்தம்
8. காகம்
9. வல்லி கண்ணன்
10. பாரதி, பாரதிதாசன்
வினாவிடை 10

1. யாருடைய வருகையால் சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் ஓர் இலக்கிய                    வகையாக புதுக்கவிதை
2. உச்சிமலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது -                                  ஒற்றுமையில்லா மனிதகுலம் உயர்வுதாழ்வு வளர்க்குது.                                            தொடரால் அறியப்படுபவர்
3. மங்கை யராகப் பிறப்பதற்கே நல்ல - மாதவம் செய்திட வேண்டுமம்மா
    தொடரால் அறியப்படுபவர்
4. பகுத்தறிவு நோக்கும் முற்போக்குச் சிந்தனையும் இவர்களூடைய                            கவிதைகளில் காணலாம்
5. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் - உறவு கலவாமை வேண்டும்
     தொடரால் அறியப்படுபவர்
6. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர்
7. தமிழ்க்கவி
8. துன்பத்தையும் நகைச்சுவையோடு பாடுவதில் வல்லவர்
9. இருபொருள் பட நகைச்சிவௌயுடன் பாடுவதில் வல்லவர்
10. ஏலாதி பாடல் எண்ணிக்கை
1. வானம்பாடி இயக்கம்
2. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
3. கவிமணி
4. புலவர்க்குழந்தை, முடியரசன்
5. திருவருட்பிரகாச வள்ளலார்
6. பாரதியார்
7. பாரதிதாசன்
8. இராமச்சந்திர கவிராயர்
9. காளமேகப் புலவர்
10. சிறப்புப்பாயிரம் தற்சிறப்புப்பாயிரம் உட்பட 81 வெண்பாக்கள்
வினாவிடை 10
1. ஐராவதூசுவரர் கோவிலைக் கட்டியவர், ஆண்டு?
2. வகுப்பறையில் கேட்பதனை விட பேராசிரியர்களை நேரில் கண்டு உரையாடுவது நல்லது என்றவர்
3. வாய் வழியாகப் பரவும் பாடல், கதைகள்
4. பள்ளி மாணவர்கள் ஓரிடம், நூலகம் வேறிடம் என்னும் நிலையை மாற்ற நம் பள்ளிக் கல்வித்துறை                               
   …………….திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது
5. பொதுநூலகச் சட்டத்தை இயற்றிய முதல் இந்திய மாநிலம், ஆண்டு
6. பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி
7. கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர்
8. பேச்சில் அணிகள் …………………………. ஆற்றல் போன்றவை
9. பேச்சுரிமை, எழுத்துரிமை பற்றிக் கூறும் அரசியல் சாசனப்பிரிவு
10. ஈகைச் (தியாகம்) சிகரத்தின் உச்சியில் நின்றவர்
விடை 10
1. இரண்டாம் இராசராச சோழன், எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்
2. நேரு (ஜவகர்லால்)
3. வாய்மொழி இலக்கியம்
4. புத்தகப் பூங்கொத்து
5. 1948 ஆம் ஆண்டு, தமிழ்நாடு
6. பன்னிரண்டாம் வகுப்பு
7. வால்ட் டிஸ்னி
8. அணு
9. அரசியல் சாசனப்பிரிவு 19 (1)
10. காந்தியடிகள்

பொருள் கூறுதல்
  • மெய்
  • உடல்
  • விதிர்விதித்து
  • உடல் சிலிர்த்து
  • விரை
  • மணம்
  • நெகிழ
  • தளர
  • ததும்பி
  • பெருகி
  • கழல்
  • ஆ கா அணிகலன்
  • சய சய
  • வெல்க வெல்க
  • வணங்கி
  • பணிந்து
  • மாண்டார்
  • மாண்புடைய சான்றோர்
  • நுணங்கிய நூல்
  • நுண்ணறிவு நூல்கள்
  • நோக்கி
  • ஆராய்ந்து
  • கொற்கை
  • பாண்டிய நாட்டின் துறைமுகம்
  • தென்னம்பொருப்பு
  • தென்பகுதியில் உள்ள பொதிகை மலை
  • பழியோடுபடரா
  • பழிசொற்கள் சேராத
  • அடர்த்தெழு குருதி
  • வெட்டுப்பட்ட இட வரும் செந்நீர்
  • பசுந்துணி
  • பசிய துண்டம்
  • தடக்கை
  • நீண்ட கைகள்
  • நீண்ட கைகள் கொண்டவள்
  • கொற்றவை
  • அருவர்க்கு இளைய நங்கை
  • ஏழுகன்னியருள் இளையவள் பிடாரி
  • இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு
  • இறைவனை நடன்மாடச் செய்த காளி
  • சூருடைக் கானகம்
  • அச்சம் தரும் காடு
  • உகந்த
  • விரும்பிய
  • தாருகன்
  • அரக்கன்
  • பேருரம் கிழித்த பெண்
  • அகன்ற மார்பைப் பிளந்த துர்க்கை
  • செற்றம்
  • கருவு
  • செயிர்த்தனள்
  • சினமுற்றவள்
  • பொற்றொழில் சிலம்பு
  • வேலைப்பாடுமிக்க பொற்சிலம்பு
  • கடையகத்தாள்
  • வாயிலின் முன்னிடத்தாள்
  • நீர்வார்க்கண்
  • நீரொழுகும் கண்ணீர்
  • தேரா
  • ஆராயாத
  • எள்ளறு
  • இகழ்ச்சி இல்லாத
  • இமையவர்
  • தேவர்
  • புள்
  • அன்னம் (புறா)
  • புன்கண்
  • துன்பம்
  • கடைமணி
  • அரண்மனை வாயில் மணி
  • ஆழி
  • தேர்ச்சக்கரம்
  • ஏசா
  • பழியில்லா
  • கோறல்
  • கொல்லுதல்
  • கொற்றம்
  • அரச நீதி
  • நற்றிறம்
  • அற நெறி
  • படரா
  • செல்லாத
  • வாய்முதல்
  • உதடு (வாயின் முதல்)
  • சுவடி
  • நூல்
  • எளிமை
  • வறுமை
  • நாணிடவும்
  • வெட்கப்படவும்
  • உலகியலின் அடங்கலுக்கும்
  • வாழ்வின் முழுமைக்கும்
  • தகத்தகாய
  • ஒளிமிகுந்த (சிறப்பு மிகுந்த)
  • சாய்க்காமை
  • அழிக்காமை
  • நூற்கழகங்கள்
  • நூல்நிலையங்கள்
  • களைந்தோம்
  • நீக்கினோம்
  • தாபிப்போம்
  • நிலைநிறுத்துவோம்
  • தெளிவுறுத்தும்
  • தெளிவாகக்காட்டும்
  • ஆய காலை
  • அந்த நேரத்தில்
  • அம்பி
  • படகு
  • நாயகன்
  • தலைவன்
  • நாமம்
  • பெயர்
  • துறை
  • தோணித்துறை
  • தொன்மை
  • தொன்றுதொட்டு
  • கல்
  • மலை
  • திரள்
  • திரட்சி
  • காயும் வில்லினன்
  • பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன்
  • துடி
  • பறை
  • அல்
  • இருள்
  • சிருங்கிப்பேரம்
  • கங்கைக்கரையோர நகரம்
  • திரை
  • அலை
  • மருங்கு
  • பக்கம்
  • உபகாரத்தன்
  • பயங்கருதாது உதவுபவன்
  • கூவா முன்னர்
  • அழைக்கும் முன்னர்
  • குறுகி
  • நெருங்கி
  • இறைஞ்சி
  • வணங்கி
  • சேவிக்க
  • வணங்க
  • நாவாய்
  • படகு
  • நெடியவன்
  • உயர்ந்தவனாகிய இராமன்
  • குறுகினன்
  • வந்துள்ளான்
  • நாவாய்
  • படகு
  • இறை
  • தலைவன்
  • பண்ணவன்
  • நற்குணங்கள் பல உடைய இலக்குவன்
  • பரிவு
  • இரக்கம்
  • குஞ்சி
  • தலைமுடி
  • மேனி 
  • உடல்
  • அருத்தியன்
  • அன்பு உடையவன்
  • மாதவர்
  • முனிவர்
  • முறுவல்
  • புன்னகை
  • விளம்பல்
  • கூறுதல்
  • பவித்ரம்
  • தூய்மையானது
  • இனிதின்
  • இனிமையானது
  • உண்டனெம்
  • உண்டோம் என்பதற்குச் சமமானது
  • தழீஇய
  • கலந்த
  • கார்குலாம்
  • மேகக்கூட்டம்
  • பார்குலாம்
  • உலகம் முழுவதும்
  • இன்னல்
  • துன்பம்
  • ஈர்கிலா
  • எடுக்க இயலாத
  • தீர்கிலேன்
  • நீங்க மாட்டேன்
  • அடிமை செய்குவேன்
  • பணிசெய்வேன்
  • குரிசில்
  • தலைவன்
  • இருத்தி
  • இருப்பாயாக
  • நயனம்
  • கண்கள்
  • இந்து
  • நிலவு
  • நுதல்
  • நெற்றி
  • கடிது
  • விரைவாக
  • முடுகினன்
  • செலுத்தினன்
  • முரிதிரை
  • மடங்கி விழும் அலை
  • இடர்
  • துன்பம்
  • மறையோர்
  • அந்தணர்
  • அமலன்
  • குற்றமற்றவன்
  • இளவல்
  • தம்பி
  • துன்பு
  • துன்பம்
  • உன்னேல்
  • நினைக்காதே
  • அரி
  • நெற்கதிர்
  • செறு
  • வயல்
  • யாணர்
  • புது வருவாய்
  • வட்டி
  • பனையோலைப் பெட்டி
  • நெடிய மொழிதல்
  • அரசிரிடம் சிறப்புப் பெறுதல்
  • துகிர்
  • பவளம்
  • மன்னிய
  • நிலைபெற்ற
  • சேய
  • தொலைவு
  • தொடை
  • மாலை
  • கலம்
  • அணி
  • காய்ந்தார்
  • நீக்கினார்
  • மனை
  • வீடு
  • பசு
  • மேதி
  • எருமை
  • நிறைகோல்
  • துலாக்கோல் (தராசு)
  • தண்ணளித்தாய்
  • குளிர்ச்சி நிறைந்த
  • தடம்
  • தடாகம்
  • மந்தமாருதசீதம்
  • இளந்தென்றல் காற்றுடன் கூடிய குளிர்ந்த நீர்
  • சந்தம்
  • அழகு
  • ஈறு
  • எல்லை
  • கல்மிதப்பு
  • கல்லாகிய தெப்பம்
  • புவனம்
  • உலகம்
  • சூலை
  • கொடிய வயிற்றுநோய்
  • தெருளும்
  • தெளிவில்லாத
  • கரம்
  • கை
  • கமலம்
  • தாமரை
  • மிசை
  • மேல்
  • திருநீற்றுக் காப்பு
  • பெரியோரால் வாழ்த்தி வழங்கப்படும் திருநீறு
  • நேர்ந்தார்
  • இசைந்தார்
  • தங்கள் சேவகர்
  • தங்களின் குழந்தைகள்
  • பொற்குருத்து
  • மிக இளமையான வாழைக்குருத்து
  • ஒல்லை
  • விரைவு
  • மல்லல்
  • வளமான
  • அம்
  • அழகிய
  • வாள்
  • கூரிய
  • அரா
  • பாம்பு
  • அல்லல்
  • துன்பம்
  • அழுங்கி
  • மிக வருந்தி
  • அங்கை
  • உள்ளங்கை
  • உதிரம்
  • குருதி
  • மேனி 
  • உடல்
  • வீந்தான்
  • இறந்தான்
  • மறைநூல்
  • நான்மறை
  • சேய்
  • குழந்தை
  • பூதி
  • திருநீறு
  • அங்கணர்
  • அழகிய நெற்றிக் கண்களையுடைய சிவன்
  • பொறாது
  • ஏற்காது
  • மெய்
  • உண்மை
  • பணிவிடம்
  • பாம்பின் நஞ்சு
  • சவம்
  • பிணம்
  • பாற்றுவித்தார்
  • போக்குவித்தார்
  • அரியாசனம்
  • சிங்காதனம்
  • பா ஒரு நான்கு
  • வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா,
  • வரம்பு
  • வரப்பு
  • நாற்கரணம்
  • மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
  • நெறிநாலு
  • வைதருப்பம் (ஆ), கௌடம் (ம), பாஞ்சாலம் (சி), மாகதம் (வி)
  • நாற்பொருள்
  • அறம், பொருள், இன்பம், வீடு
  • கோட்டிக்கொளும்
  • கூட்டமாகக் கூடும்
  • சீத்தையர்
  • கீழானவர், போலிப் புலவர்
  • தூர்கட்டி
  • பயிர் அடி பருத்து வளர்தல்
  • நாளிகேரம்
  • தென்னை
  • இடர்
  • துன்பம்
  • ஏமாப்பு
  • பாதுகாப்பு
  • பிணி
  • நோய்
  • நடலை
  • துன்பம்
  • சேவடி
  • இறைவனின் செம்மையான திருவடிகள்
  • நமன்
  • எமன்
  • தெண்டிரை
  • தெளிந்த அலைகள்
  • கான்
  • காடு
  • தடக்கரி
  • பெரிய யானை
  • திரள்
  • கூட்டம்
  • அறைகுவன்
  • சொல்லுவான்
  • தாரை
  • வழி
  • அணித்தாய்
  • அண்மையில்
  • அடவி
  • காடு
  • உழுவை
  • புலி
  • கூண்ட 
  • சேர்ந்த
  • கனல்
  • நெருப்பு
  • வெள்ளெயிறு
  • வெண்ணிறப் பற்கள்
  • புலால்
  • இறைச்சி
  • வனம்
  • காடு
  • வள்ளுகிர்
  • கூர்மையான நகம்
  • மடங்கல்
  • சிங்கம்
  • நிணம்
  • கொழுப்பு (இறைச்சி)
  • மதகரி
  • மதம் பொருந்திய யானை
  • கோடு
  • தந்தம்
  • கிரி
  • மலை
  • இரும்பனை
  • பெரிய பனை
  • உரும்
  • இடி
  • அலறும்
  • முழங்கும்
  • தொனி
  • ஓசை
  • மேதி
  • எருமை
  • கவை
  • பிளந்த
  • கேழல்
  • பன்றி
  • எண்கு
  • கரடி
  • மரை
  • மான்
  • கவையடிக் கேழல்
  • பிளந்த கால்களைக் கொண்ட பன்றி
  • எழில்
  • அழகு
  • புயம்
  • தோள்
  • முறுவல்
  • புன்னகை
  • வேங்கை
  • புலி
  • வென்றி
  • வெற்றி
  • அணித்து
  • அருகில்
  • விளம்பினான்
  • சொன்னான்
  • மாதிரம்
  • மலை
  • கேசரி
  • சிங்கம்
  • புளகிதம்
  • மகிழ்ச்சி
  • காது
  • கொல்லுதல்
  • கவின்
  • அழகு
  • பூதரம்
  • மலை
  • வீதிவாய்வர
  • பாதையில் வர
  • பெருஞ்சிரம்
  • பெரிய தலை
  • தெண்டனிட்டது
  • வணங்கியது
  • வள்ளுகிர்
  • கூர்மையான நகம்
  • தெரிசனம்
  • காட்சி
  • சலாம்
  • வணக்கம்
  • திண்திறல்
  • உறுதியான வலிமை
  • புந்தி
  • அறிவு
  • மந்தராசலம்
  • மந்திர மலை
  • சந்தம்
  • அழகிய
  • சிரம்
  • தலை
  • இவண்நெறியில்
  • இவ்வழியில்
  • செகுத்திடுவது
  • உயிர் வதை செய்வது
  • அறைந்த 
  • சொன்ன
  • அதிசயம்
  • வியப்பு
  • உன்னி
  • நினைத்து
  • தெளிந்தார்
  • தெளிவு பெற்றார்
  • கிளை
  • சுற்றம்
  • நோன்றல்
  • பொறுத்தல்
  • புயல்
  • மேகம்
  • பணை
  • மூங்கில்
  • பகரா
  • கொடுத்து
  • பொருது
  • மோதி
  • நிதி
  • செல்வம்
  • புனல்
  • நீர்
  • கவிகை
  • குடை
  • வானகம்
  • தேவருலகம்
  • மின்நோக்கும்
  • மீன்கள் வாழும் 
  • என்பால்
  • என்னிடம்
  • தார்வேந்தன்
  • மாலையணிந்த மன்னன்
  • கோல் நோக்கி
  • செங்கோல் செய்யும் அரசனை நோக்கி
  • கண்ணோட்டம்
  • இரக்கம் கொல்லுதல்
  • எண்வனப்பு
  • ஆராய்ச்சிக்கு அழகு
  • வனப்பு
  • அழகு
  • கிளர்வேந்தன்
  • புகழுக்குரிய அரசன்
  • வாட்டான்
  • வருத்த மாட்டான்
  • எம்பி
  • என் தம்பி
  • மடப்பிடி
  • பாஞ்சாலி
  • களிக்க
  • மகிழ
  • கோமான்
  • அரசன் (திரிதராட்டிரன்)
  • நுந்தை
  • நும் தந்தை
  • அடவி
  • காடு
  • தடந்தோள்
  • வலிய தோள்
  • மணிநகர்
  • அழகிய நகர்
  • மருங்கு
  • பக்கம்
  • கோல்முறு
  • அழகுமிக்க
  • செறிந்து
  • அடந்து
  • கா
  • காடு
  • குலவு
  • விளங்கும்
  • ஞாலம்
  • உலகம்
  • பண்ணவர்
  • தேவர்
  • அரம்பையர்
  • தேவமகளிர்
  • ஞானம்
  • அற்வு
  • புன்மை
  • நெறிபிறழ்ந்த செயல்கள்
  • வீறு
  • வலிமை
  • சதுரங்கச்சேனை
  • நால்வகைப்படை
  • மதுரமொழி
  • இனியமொழி
  • குசலங்கள் பேசி
  • நலன் கேட்டு
  • பிடி
  • பெண்யானை
  • வையைநாடவன்
  • பாண்டியன் (சண்பகப்பாண்டியன்)
  • உய்ய
  • பிழைக்க
  • இரந்து செப்பினான்
  • பணிந்து வணங்கினான்
  • தென்னவன் குலதெய்வம்
  • சொக்கநாதன் (சுந்தரபாண்டியன்)
  • இன்னல்
  • துன்பம்
  • நல்கினார்
  • அளித்தார்
  • இறைஞ்சி
  • பணிந்து
  • அளக்கில் கேள்வியார்
  • அளவற்ற நூலறிஞர்
  • சிரம்துளக்கி
  • தலையசைத்து
  • மீனவன்
  • மீன் கொடியை உடைய பாண்டியன்
  • விபுதர்
  • புலவர்
  • தூங்கிய
  • தொங்கிய
  • பொற்கிழி
  • பொன்முடி
  • நம்பி
  • தருமி
  • புறம்பு
  • வெளியில்
  • பையுள்
  • வருத்தம்
  • பனவன்
  • அந்தணன்
  • கண்டம்
  • கழுத்து
  • வழுபாடல்
  • குற்றமுள்ள பாடல்
  • ஆர்அவை
  • நிறைந்த அவை (புலவர்கள்)
  • கிளத்தினேன்
  • சொன்னேன்
  • சீரணி
  • புகழ் வாய்ந்த
  • வேணி
  • செஞ்சடை
  • ஒரான்
  • உணரான்
  • அற்குற்ற
  • இருளையொத்த
  • நாற்றம்
  • நறுமணம்
  • குழல்
  • கூந்தல்
  • அல்கு
  • இருள்
  • ஏத்தும்
  • வணங்கும்
  • அரவுநீர்ச் சடையார்
  • சிவபெருமான்
  • ஞானப்பூங்கோதை
  • உமையம்மை
  • வெருவிலான்
  • அச்சமற்ற நக்கீரன்
  • சலம்
  • மன உறுதி
  • சஞ்சலம் 
  • உறுதியற்ற
  • கற்றைவார் சடையான்
  • சிவபெருமான்
  • உம்பரார்பதி
  • தேவர்தலைவன் (இந்திரன்)
  • நுதல்விழி
  • நெற்றிக்கண்
  • பொற்பங்கயத்தடம்
  • பொற்றாமரைக்குளம்
  • நாவலன்
  • புலவர்
  • கரந்தான்
  • மறைந்தான்
  • நாய்க்கால்
  • நாயின் கால்
  • ஈக்கால்
  • ஈயின் கால்
  • நன்கணியர்
  • நெருங்கி இருப்பவர்
  • என்னாம்
  • என்ன பயன்?
  • சேய் (மை)
  • தொலைவு
  • செய்
  • வயல்
  • அனையார்
  • போன்றோர்
  • தலைசாயுதல்
  • ஓய்ந்து படுத்தல்
  • வண்மை
  • கொடைதன்மை, ஈகை, 
  • உழுபடை
  • வேளாண் செய்யப் பயன்படும் கருவிகள்
  • கோணி
  • சாக்கு
  • நடை
  • சாலையில் செல்லும் வண்டிகள்
  • பறப்பு
  • வானூர்தி முதலான
  • ஞாலம்
  • உலகம்
  • உவந்து செய்வோம்
  • விரும்பிச்செய்வோம்
  • தமிழ் மகள்
  • ஔவையார்
  • மேலவர்
  • மேலோர்
  • கீழவர்
  • கீழோர்
  • மற்றோர்
  • பிறர்க்கு உதவும் நேர்மை குணம் அற்றோர்
  • நெறியினின்று
  • அற நெறியில் நின்று
  • மடவார்
  • பெண்கள்
  • தகைசால்
  • பண்பில் சிறந்த
  • மனக்கினிய
  • மனதுக்கு இனிய
  • காதல் புதல்வர்
  • அன்பு மக்கள்
  • ஓதின்
  • எதுவென்று சொல்லும் போது
  • புகழ்சால்
  • புகழைத்தரும்
  • உணர்வு
  • நல்லெண்ணம்
  • ஆற்றவும்
  • நிறைவாக
  • நாற்றிசை
  • நான்கு + திசை  (கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு)
  • தமவேயாம்
  • தம்முடைய நாடுகளே
  • ஆற்றுணா
  • ஆறு + உணா  - வழிநடை உணவு, கட்டுச்சோறு
  • வெய்யவினை
  • துன்பம் தரும் செயல்
  • வேம்பு
  • கசப்பான சொற்கள்
  • வீறாப்பு
  • இறுமாப்பு
  • பலரில்
  • பலர் + இல் - பலருடைய வீடுகள்
  • புகலல் ஒண்ணாதே
  • செல்லாதே
  • சாற்றும்
  • புகழ்ச்சியாகப் பேசுவது
  • கடம்
  • உடம்பு
  • ஒன்றோ
  • தொடரும் சொல்
  • நாடாகு ஒன்றோ
  • நாடாக இருந்தால் என்ன அல்லது …
  • அவல்
  • பள்ளம்
  • மிசை
  • மேடு
  • ஆடவர்
  • ஆண்கள் (மக்கள்)
  • நல்லை
  • நல்லதாக இருக்கிறாய்)
  • இரட்சித்தானா
  • காப்பாற்றினானா
  • அல்லைத்தான்
  • அதுவும் இல்லாமல்
  • ஆரைத்தான்
  • யாரைத்தான்
  • பதுமத்தான்
  • தாமரையில் உள்ள பிரமன்
  • புவி
  • உலகம்
  • குமர கண்ட வலிப்பு
  • ஒரு வகை வலிப்பு நோய்
  • இணக்கவரும்படி
  • மனம் கனியும் படி
  • குணக்கடலே அருட் கடலே
  • முருகனை நோக்கி பாடியது
  • குரைகடல்
  • ஒலிக்கும் கடல், அசுரர்கள் கடல் போல் வந்த
  • பரங்குன்றுளாளன்
  • திருப்பரங்குன்றம் முருகன்
  • வானரங்கள்
  • குரங்கு (ஆண் குரங்கு
  • மந்தி
  • பெண் குரங்கு
  • வான் கவிகள்
  • தேவர்கள்
  • கமண சித்தர்
  • வான் வழியே நினைத்த இடத்திற்குச் செல்லும் சித்தர்கள்
  • காயசித்தி
  • இறப்பை நீக்கிக் காக்கும் மூலிகை
  • பரிக்கால்
  • குதிரையின் கால்
  • கூனல்
  • வளைந்த
  • வேணி
  • சடை
  • மின்னார்
  • பெண்கள்
  • மருங்கு
  • பக்கம்
  • சூல்உளை
  • கருவைத் தாங்கும் துன்பம்
  • கோட்டு மரம்
  • கிளைகளையுடைய மரம்
  • பீற்றல் குடை
  • பிய்ந்த குடை

Comments

Post a Comment

Popular posts from this blog

8 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்

8 ஆம் வகுப்பு செய்யுள்

8 ஆம் வகுப்பு உரைநடை