பொதுமை
வேட்டல் |
- தெய்வ நிச்சயம் முதலாக போற்றி ஈறாக 44 தலைப்புகள்
|
|
- நாடு, இனம், மதம், மொழி
அனைத்தும் கடந்து உலகை ஒரு குடும்பமாகக் கருதுவது
|
- நாடு, இனம், மொழி, மத
வேற்றுமைகள் விலகும், சமுதாய ஒற்றுமை வளரும், மனித நேயம் மலரும்
|
- உலகம் தழுவிய
ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்
முதுமொழிக்காஞ்சி
(மதுரைக் கூடலூர் கிழார்) |
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள்
ஒன்று
|
- அறவுரைக்கோவை எனவும்
அழைக்கப்பெறும்
|
- சிறந்தது எனக் கூறப்படும்
பத்துப் பொருள்களைத் தன்னகத்தே கொண்டிருப்பது
|
- 10 அதிகாரம், 100 பாடல்கள்
கொண்ட நூல்
|
- காஞ்சித் திணையின் துறைகளுள்
ஒன்று
|
- உலகியல் உண்மைகளைத் தெளிவாக
எடுத்தியம்பும் நூல்
|
- கற்போரின் குற்றங்களை நீக்கி
அறம், பொருள், இன்பம் அடைவதற்கான அறவுரைகளாக
|
|
கல்விக்கு எல்லை இல்லை (சங்ககாலத்திற்குப் பின் வாழ்ந்தவர்)
- தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்றது
- இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்கிணங்க
- சந்திர சேகரக் கவிராசப்பண்டிதர் தமிழகம் முழுவதும் தேடிச்சென்று தொதுத்துள்ளார்
- தமிழ்மொழியின் பெருமை, புலவரின் புலமை,
- சொல்லின்பம், பொருளின்பம், கற்பனையின்பம் தருவது
திரிகடுகம் (நல்லாதனார்)
- நூல் வகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- பா வகை வெண்பா
- பாடல் எண்ணிக்கை 100 வெண்பாக்கள்
- ஆசிரியர் நல்லாதனார்
- நூற்பயன் மனமயக்கத்தைப்போக்கித் தெளிவைக் கொடுக்கும் அறியாமையாகிய நோயைப்போக்கிக் குன்றின்மேலிட்ட விளக்காக்கும்
- கருத்துக்களின் எண்ணிகை மூன்று
- மருந்து பொருள்கள் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றால் ஆன மருந்து
நாய்க்கால்
சிறுவிரல் போல் நன்கனீயராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார்
நட்பென்னாம்
சேய்த்தாலும் சென்றுகொளல் வேண்டும் - செய்வினைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு. நாலடியார் |
- நூல் வகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
|
- வேறு
பெயர்கள் நாலடி நானூறு, வேளான் வேதம்
|
- பாடல்
எண்ணிக்கை 400 பாடல்கள்
|
- பாடல்
ஆசிரியர் சமண முனிவர் பலர்
|
- பாடலின்
கருத்து அறக்கருத்துக்கள்
|
மனைக்கு விளக்கு மடவார்; மடவார் தனக்குத் தகைசால் புதல்வர்; மனக்கினிய காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும் ஓதின் புகல்சால் உணர்வு. நான்மணிக்கடிகை
- கடிகை
என்பதன் பொருள் அணிகலன்
|
- நான்மணிக்கடிகை
என்பதன் பொருள்
நான்கு மணிகள் கொண்ட அணிகலன் |
- நான்மணிக்கடிகை
பாடலின் கருத்துக்கள் எண்ணிக்கை 4
- நான்மணிக்கடிகை ஆசிரியர் விளம்பி நாகனார்
|
ஆற்றவும்
கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை அவை
வேற்றுநாடு ஆகா
தமவேயாம் ஆதலால்
ஆற்றுணா வேண்டுவது இல். கல்வியின் சிறப்பு
- கல்வியின்
சிறப்பு இடம் பெற்ற நூல் பழமொழி நானூறு
நூல் வகை பதினெண்கீழ்க்கணக்கு |
கல்வியின் சிறப்பு ஆசிரியர் முன்றுரை அரையனார் |
- பாடல் எண்ணிக்கை நானூறு
|
- ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி இடம் பெறும் நூல் பழமொழிநானூறு
- பாடலில் இடம்பெற்ற பழமொழி ஆற்றுணா வேண்டுவது இல்
- ஆற்றுணா வேண்டுவது இல் என்பதன் பொருள் கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டா
|
|
வைதாரைக்
கூட வையாதே - இந்த வைய முழுவதும் பொய்த்தாலும் பொய்யாதே |
வெய்ய
வினைகள் செய்யாதே - கல்லை பறவைகள் மீது எறியாதே |
பாம்பினைப்
பற்றி ஆட்டாதே, பத்திகளைப் பழிக்காதே |
வேம்பினை
உலகில் ஊட்டாதே - வீறாப்பௌ நாட்டாதே |
போற்றும்
சடங்கை நண்ணாதே - புகலல் ஒண்ணாதே |
சாற்றும்முன்
வாழ்வை எண்ணாதே - தாழ்வை நீ பண்ணாதே |
கள்ள
வேடம் புனையாதே - கங்கையில் நனையாதே |
கொள்ள
கொள்ள நினையாதே - கோள் முனையாதே. சித்தர் பாடல் |
- சித்தர்
பாடல் ஆசிரியர் கடுவெளிச்சித்தர்
- சித்தர்கள் வாழ்ந்த காலம் 400 ஆண்டுகளுக்கு முன்
- சித்தர்கள் வாழ்ந்த இடம் காடு, மலைகளில்
- வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர் கடுவெளிச்சித்தர்
- அழுகுணிச்சித்தர், கதம்பைச்சித்தர், பாம்பாட்டிச் சித்தர் என்பன அனைத்தும் ...................... பெயர்கள். காரணப்பெயர்கள்
|
|
|
|
நாடாகு
ஒன்றோ காடாகு ஒன்றோ |
அவலாகு
ஒன்றோ மிசையாகு ஒன்றோ |
எவ்வழி
நல்லவர் ஆடவர் |
அவ்வழி
நல்லை வாழிய நிலனே |
- நாடாகு
ஒன்றோ பாடல் ஆசிரியர் சங்க கால ஔவையார்
|
- அரிய
நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் சங்ககால ஔவையார்
|
- சங்ககால
பெண் புலவர்களில் மிகுதியான பாடல் பாடியவர் ஔவையார்
|
- சங்க
இலக்கியம் …………….. ஆண்டுகள் பழமை வாய்ந்தவை ஈராயிரம் (2000)
|
- பாடல் வகை நேரிசை ஆசிரியப்பா
|
- ஆடவர் என்பதன் பொருள் ஆண்கள் (இப்பாடலில் மக்கள்)
|
Comments
Post a Comment